Rajinikanth's "Annamalai" || மலடா.. அண்ணாமல.. ரஜினியின் "அண்ணாமலை" வெளியாகி 33 ஆண்டுகள் நிறைவு
ரஜினிக்கு முதன்முதலாக சூப்பர் ஸ்டார் என டைட்டில் கார்டில் போடப்பட்ட படம் தான் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்துல 1992 ஆம் ஆண்டு வெளிவந்த அண்ணாமலை...
இந்த படத்துல , குஷ்பூ, சரத் பாபு, மனோரமா, ஜனகராஜ், ராதா ரவினு பலர் தங்களோட அசத்தலான நடிப்ப வெளிபடுத்தியிருந்தாங்க....ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்ப பெற்றது மட்டுமல்லாமல் படத்தோட பேர சொன்னதும் ரசிகர்கள் சொல்லும் ஒரே டயலாக்... ‘மலடா அண்ணாமல'’ தான். அந்தளவிற்கு இந்த படம் மக்களால கொண்டாடப்பட்டுச்சு...
ஹீரோவுக்கான மேனரிஸம், ஆக்சன், இசைனு படத்த செதுக்கியிருந்தாங்க....அதுவும் ரஜினியோட ஸ்டைல்னா சொல்லவா வேணும்....மாஸான நடை, வேகம், பேச்சு மூலமா இந்த படத்துல ரஜினி, ரசிகர்கள கட்டிப்போட்டிருப்பாரு....நட்பு, துரோகம், பழிவாங்கல்னு எல்லாத்தையும் இந்த படத்துல எதார்த்தமா காட்சி படுத்தியிருந்தது ரசிகர்கள ரொம்ப கவர்ந்திருந்தது......
பால் காரனா இருக்குற ரஜினிக்கும், பணக்காரரரா இருக்க சரத்பாபுக்கும் இடையிலான நட்பு, விரிசலா மாறி, கடைசில 2 பேரும் சேர்ந்தாங்களா இல்லையானு ரசிகர்கள யோசிக்க வெக்குறது தான் கதை... முதன்முதலா ரஜினி படத்துக்கு இசையமைச்ச தேவாவோட சூப்பர் ஹிட் பாடல்கள சொல்லவே வேணாம்...
அதுலயும் முதல் பாதில இடுப்புல துண்டு, கையில பால் கேன்னு எளிமையான பால்காரனாவும், 2ம் பாதில கோட், சூட்ல அசத்தலான பிசினஸ்மேனாவும் மிரட்டியிருப்பாரு நம்ம சூப்பர் ஸ்டார்...
குறிப்பாக தொடையை தட்டி சபதம் எடுக்கும் காட்சிகள் நடிகர் விஜய் தொடங்கி தமிழ் சினிமாவில் ஹீரோவாக நினைச்ச பலருக்கும்.... இன்ஸ்பிரேஷனாக (inspiration) இருந்துருக்கு....
அதேபோல வந்தேண்டா பால்காரன், அண்ணாமலை அண்ணாமலை, கொண்டையில் தாழம்பூ னு கவிஞர் வைரமுத்துவோ அவரோட பங்குக்கு வரிகள புதுமை புகுத்த, தேவா இசைல படத்தோட இந்த பாடல்கள் அத்தனையும் ரசிகர்களும் மதிமயங்கி போயிட்டாங்க......
தொடர்ச்சியான ஹவுஸ்ஃபுல் காட்சிகளால கலெக்ஷன் அள்ளின இந்த திரைப்படம் வெளியாகி இன்றோட 33 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கு...இத ரஜினி ரசிகர்கள் சோஷியல் மீடியால பதிவிட்டு உற்சாகம் தெரிவிக்கிறாங்க....