லொள்ளு சபா நடிகர் ஆண்டனி காலமானார்
லொள்ளு சபா நகைச்சுவை நிகழ்ச்சியின் நடிகர் ஆண்டனி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளுசபா நிகழ்ச்சி மூலமாக பிரபலம் அடைந்தவர் ஆண்டனி. நடிகர் சந்தானத்துடன் பல எபிசோடுகளில் ஒன்றாக நடித்தவர். கடந்த சில ஆண்டுகளாக நுரையீரல் தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது மறைவு சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.