தமிழகத்தில் உள்ளாட்சி கேளிக்கை வரியை குறைக்க, அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக திரையரங்குகளில் தற்போது 12 சதவீத ஜிஎஸ்டி, 8 சதவீத உள்ளாட்சி கேளிக்கை வரி மற்றும் 4 ரூபாய் பராமரிப்பு கட்டணத்துடன் சேர்த்து, ஒரு சினிமா டிக்கெட்டுக்கான கட்டணம் அதிகபட்சம் 200 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இதில், உள்ளாட்சி கேளிக்கை வரியை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டுமென மாநில அரசுக்கு திரைத்துறை தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில், கேளிக்கை வரியை 4 சதவீதமாக குறைக்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.