“கும்கி 2“ படத்தின் டீசர் வெளியீடு
பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகனாக புதுமுகம் மதி அறிமுகமாகிறார். மேலும் நடிகர்கள் அர்ஜுன் தாஸ், ஷிரிதா ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த டீசர் ஒரு மனிதனுக்கும் யானைக்கும் இருக்கும் அழகிய பிணைப்பை காட்டுகிறது என்றும் இந்த கதை நட்பு, நம்பிக்கை மற்றும் உணர்ச்சியால் இதயத்தை தொடுகிறது என்றும் பட தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.