ஆஸ்திரேலியாவின் முதல் இந்திய வம்சாவளி அமைச்சரான ஜின்சன் ஆண்டோ சார்லஸ், நடிகர் மம்முட்டியை சந்தித்தார். அமைச்சரான பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு வந்த ஜின்சன், டெல்லி மற்றும் திருவனந்தபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதையடுத்து ஆஸ்திரேலியா செல்லும் முன் கொச்சியில் நடிகர் மம்முட்டியை சந்தித்தார். அப்போது மம்முட்டியை ஆஸ்திரேலியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.