நடிகர் ரவிமோகன் - ஆர்த்தி விவகாரம் குறித்து, பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவி மோகன் - ஆர்த்தி விவகாரத்தில் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர். பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடனான உறவு குறித்தும் நடிகர் ரவிமோகன் வெளிப்படையாக விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், பாடகி கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இந்த சத்தங்களுக்கு இடையே அமைதியான நம்பிக்கை ஒன்று காத்திருக்கிறது என தெரிவித்துள்ளார். தனது இசையை பிடித்துக்கொண்டு நிற்பதாக குறிப்பிட்டுள்ள அவர், காயங்களை பாடங்களாக ஏற்றுக்கொள்வதாகவும், நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.