செம்மணூர் இன்டர்நேஷனல் ஜுவல்லரி | 2வது கிளையை திறந்து வைத்த காஜல் அகர்வால்

Update: 2025-10-04 14:45 GMT

பிரபல ஜூவல்லரி நிறுவனமான செம்மணூர் இன்டர்நேஷனல் ஜுவல்லரி சென்னையில் தனது இரண்டாவது கிளையை ஆவடியில் திறந்துள்ளது. சிறப்பு விருந்தினராக அமைச்சர் நாசர் கலந்து கொண்டு, நகைக்கடையை திறந்து வைத்தார். கடையின் உரிமையாளர் பாபி போர்ச் மற்றும் நடிகை காஜல் அகர்வால் ஆகியோரும் அமைச்சருடன் சேர்ந்து ரிப்பன் வெட்டி ஜுவல்லரியை திறந்து வைத்தனர். தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு முதல் விற்பனையை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். மேலும் இந்த விழாவில் பொதுமக்களுக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் இந்த ஜுவல்லரியில் வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் மதிப்பிலான 18 கேரட் தங்கம் பதித்த கண் கண்ணாடி, வைரம், டைட்டானியம் பதித்த கைக்கடிகாரம் மற்றும் பெல்ட் பக்கில் ஆகியவை பொது மக்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் பல்வேறு புதிய டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வைரம் மற்றும் தங்க நகைகளை மக்கள் பார்த்து ரசித்தும், மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்