JanaNayagan First Look | Vijay | ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் கொடுத்த "ஜன நாயகன்"

Update: 2025-06-22 02:25 GMT

விஜய்யின் பிறந்தநாளையொட்டி 'ஜன நாயகன்' படத்தின் பர்ஸ்ட் ரோர் வெளியாகி உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். "ஜன நாயகன்" வரும் ஜனவரி 9 ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. ''ஜன நாயகன்' விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவான பர்ஸ்ட் ரோர் வெளியாகி உள்ளது. என் நெஞ்சில் குடியிருக்கும் என பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ள வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். ஜனநாயகன் படத்தின் பர்ஸ்ட் ரோர் வெளியான 15 நிமிடங்களில் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்