பிரமிக்க வைக்கும் காட்சிகள், பிரமாண்ட படைப்பு மற்றும் சிறப்பான கதைகளம் என உலகமே வியந்து பாராட்டிய படைப்புதான் ஜேம்ஸ் கேமரூனின் அவதார். 2009ல் அவதார் வெற்றியை தொடர்ந்து, அவதார் FRANCHISE-ஐ தொடங்கிய கேமரூன், அதில் 2வது பாகமாக AVATAR THE WAY OF WATER படத்தை 2022ஆம் ஆண்டு ரிலீஸ் செய்தார். படத்திற்கு செம்ம வரவேற்பு. தற்போது 3வது படைப்பாக, AVATAR FIRE AND ASH திரைப்படம் வருகிற டிசம்பர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இதனை கொண்டாடுவதற்காக 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படத்தை இந்தியாவில் அக்டோபர் 2ஆம் தேதி 3டியில் வெளியிடப்படும் என அறிவித்து படக்குழு புரோமோவை வெளியிட்டுள்ளது.