ஜெயிலர்-2 படத்திலும் மோகன்லால் நடிப்பது உறுதி? | Jailer 2 | Rajinikanth | Mohanlal
ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமாரை வச்சி ஜெயிலர் என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தாரு இயக்குநர் நெல்சன் திலீப்குமார். இப்ப பார்ட்-2 ஷூட்டிங் விறுவிறுப்பா போயிட்டு இருக்கு.
இதுலயும் சிவராஜ்குமார் நடிக்குறது உறுதியாகிடுச்சி.. இதேபோல, மோகன்லாலும் நடிக்கலாம்னு பேசிட்டு வராங்க.
மலையாளத்துல துடரும் படத்தோட பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, ஹிருதயபூர்வம் Hridayapoorvam படத்துல பிஸியா நடிச்சிட்டு வராரு மோகன்லால். இந்த நேரத்துல, ஷூட்டிங் அப்ப, மோகன்லாலை நெல்சன் சந்திச்சி, ஜெயிலர் 2 கதை டிஸ்கஸன்ல ஈடுபட்டதா மலையாள சினிமா வட்டாரங்கள் சொல்லிட்டு வரது.
இதுமட்டுமில்ல மோகன்லால் நடிக்குறது உறுதியாகிடுச்சினும் சொல்லிட்டு இருக்காங்க...
தெலுங்குல பாலகிருஷ்ணா நடிக்க வாய்ப்பு இருக்குறதா கூறப்படும் நிலையில், ரஜினிகாந்த், மோகன்லால், பாலகிருஷ்ணா, சிவராஜ்குமார்னு 4 மிகப்பெரிய ஸ்டார்ஸ் ஒன்னு சேர்ந்து ஸ்க்ரீன்ல வந்தா செம்மையா இருக்கும்னு ஃபேன்ஸ் இப்பவே FIRE விட்டுட்டு இருக்காங்க...