சினிமாவில் விஜய், அஜித் என யாருடைய இடமும் காலி ஆகாது என்று நடிகர் அருண் பாண்டியன் கூறியுள்ளார். திருப்பூரில் நடைபெற்ற அஃகேனம் பட முன்னோட்ட நிகழ்ச்சியில், படக் குழுவினருடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நடிகர் கமல்ஹாசன், ஆஸ்கர் குழுவில் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். சினிமாவில் விஜய், அஜித் என யாருடைய இடமும் காலி ஆகாது, அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.