``ஒரு தந்தையாக பெருமை அடைகிறேன்’’ செல்ல மகளை நினைத்து உருகிய AR ரஹ்மான்..!
சுவிட்சர்லாந்த் கல்லூரியில் பட்டம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது இளைய மகள் பட்டம் பெற்ற புகைப்படத்தை வலைதள பக்கத்தில் பதிவிட்டு, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இளையமகள், ரஹீமா ரஹ்மான் சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள பிரபல கல்லூரி ஒன்றில் Hospitality, Entrepreneurship, and Innovation துறையில் பயின்று வந்தார். இந்த நிலையில் மகள் கல்லூரி படிப்பு முடிந்ததும் பட்டம் பெற்றுள்ளதை, தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒரு தந்தையாக நான் பெருமை அடைகிறேன் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.