``தயாரிப்பாளரை ஏமாற்றிய ஹீரோயின்’’ - ஓபனாக பேசி மேடையை சலசலப்பாக்கிய பேரரசு
கடுக்கா படத்தில் இயக்குநர் பேரரசு பேச்சால் பரபரப்பு
பத்து டிக்கெட் வாங்கினால் ஐந்து டிக்கெட் ஃப்ரீ ஆ கொடுங்க என நடிகர் சவுந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளார். விரைவில் வெளியாகவிருக்கும் கடுக்கா திரைப்படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சவுந்தரராஜன், கடுக்கா மிகச்சிறப்பான கருத்தைச் சொல்லும் படமாக உள்ளது, 10 டிக்கெட் எடுத்தால் 5 டிக்கெட் இலவசம் என்று அறிவித்தால், படத்தின் மீது ஈர்ப்பு வரும் என கூறினார். பின்னர் பேசிய இயக்குநர் பேரரசு, ஒரே பெண்ணை காதலிக்கும் இரு ஹீரோக்களில், ஹீரோயின் யாருக்கு கடுக்கா கொடுக்கபோகிறார் என்பது தான் கதை, ஆனால் ஹீரோயின் உண்மையிலேயே ஏமாற்றியது தயாரிப்பாளரை தான் என காட்டமாக பேசினார். பேரரசின் பேச்சால் விழா அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது.