"கைது செய்ய வேண்டும்" - நெப்போலியன் மகன் குறித்து அவதூறு.. யூடியூபர்கள் மீது புகார்
நடிகர் நெப்போலியன் மகன் குறித்து அவதூறு பரப்பிய யூடியூபர்கள் மீது நெல்லை எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியனின் மகனான தனுஷ் - அஷ்யா தம்பதியின் திருமணம் பிரம்மாண்டமாக சமீபத்தில் நடைபெற்றது. இந்த சூழலில், தனுஷின் உடல்நிலை, அவரது இல்லற வாழ்க்கை உள்ளிட்டவை குறித்து சமூக வலைத்தளங்களிலும் யூடியூப் சேனல்களிலும் சிலர் அவதூறு கருத்துகளைப் பரப்பி வந்தனர். இதனால், மன உளைச்சலில் உள்ள நெப்போலியனின் குடும்பத்தினர், தங்களது மயோபதி மருத்துவமனை நிர்வாகத்தினர் மூலம் நெல்லை எஸ்பி அலுவலகத்தில், இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.