``சர்ப்ரைஸ்ன்னு சொல்லி கண்ண மூட வச்சி தாலி கட்டிட்டான்'' - புது பகீர் கிளப்பிய சின்னத்திரை நடிகை

Update: 2025-07-25 03:27 GMT

ராஜ்கண்ணன் தன்னை ஏமாற்றி தாலி கட்டியதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடி தீர்வு காண போவதாகவும் சின்னத்திரை நடிகை ரெகானா பேகம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். ரெகானா பேகம் புகார் தொடர்பாக பூந்தமல்லி போலீசார் இருதரப்பினரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். இருவரும் வழக்கறிஞர்களுடன் ஆஜரான நிலையில் போலீசார் தனித்தனியாக விசாரித்தனர். இருவரும் பணம் கொடுத்தது மற்றும் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை போலீசார் சரிபார்த்துள்ளனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் தீர்வு கண்டு கொள்வதாக கூறியதன் பேரில், இரு தரப்பினரிடம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்