நடிகை ஹன்சிகா மீதான வழக்கில் மும்பை காவல்துறை பதிலளிக்க அம்மநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹன்சிகாவின் சகோதரரான பிரசாந்த், 2020 ஆம் ஆண்டு
சின்னத்திரை நடிகை முஸ்கானை திருமணம் செய்த நிலையில், 2022 ஆண்டு முதல் அவர்கள்
பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதையடுத்து பிரசாந்த், ஹன்சிகா மற்றும் அவரது தாயார் மீது குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக முஸ்கான் போலீசில் புகார் அளித்தார். அந்த வழக்கில் இருந்து முன்ஜாமீன் பெற்ற ஹன்சிகா, வழக்கை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு மும்பை காவல்துறையை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.