நெகிழ்ச்சியுடன் பேசி ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட வீடியோ

Update: 2025-08-02 03:27 GMT

சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், தேர்வுக் குழுவுக்கும், வாத்தி படக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது இரண்டாவது முறை கிடைத்த ஆசிர்வாதம் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் தனுஷுடன் பொல்லாதவன் முதல் அசுரன், வாத்தி, இட்லி கடை வரை தொடர்ந்த பயணம், தங்கள் இருவருக்கும் புதுமையாகவும் வெற்றிகரமாகவும் அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னை ஊக்குவித்த இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு இதயப்பூர்வமான நன்றி என்றும் அந்த அறிக்கையில் ஜி.வி.பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்