பேரன்பும் பெருங்கோபமும் திரைப்படம் சாதிய பிரச்னைகளை மிக நுட்பமாக அணுகுவதாக விசிக தலைவர் திருமவாளவன் தெரிவித்துள்ளார். சிவபிரகாஷ் இயக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவாகி உள்ள திரைப்படம் பேரன்பும் பெருங்கோபமும். இத்திரைப்படத்தை பார்த்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த திருமாவளவன், படத்தின் இயக்குநர் சிவபிரகாஷை பாராட்டியுள்ளார். மேலும், நாட்டார் தெய்வங்கள் படுகொலை செய்யப்பட்டு, பின்னர் தெய்வங்களான கதைகளை சுட்டிகாட்டி, அதனடிப்படையில் பேரன்பும் பெருங்கோபமும் திரைப்படம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.