தமிழ் சினிமாவில் கடந்த 4 மாதங்களில் வெளியான 85 படங்களில் good bad ugly, கேங்கர்ஸ் உள்ளிட்ட ஏழு படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றுள்ளன.
ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெலியான குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல்10ம் தேதி வெளியான நிலையில் தற்போது வரை இந்தப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ரெக்கார்டை குட் பேட் அக்லி ஓவர்டேக் செய்துள்ளது. மேலும், இந்தாண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழில் 85 படங்கள் வெளியான நிலையில், மதகஜராஜா, டிராகன், குடும்பஸ்தன் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்தது. மேலும், சுந்தர்.சி-யின் கேங்கர்ஸ் படமும் நல்ல வசூலை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.