Good Bad Ugly FDFS - அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்

Update: 2025-04-10 03:46 GMT

திருநெல்வேலியில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'Good Bad Ugly' திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், கொண்டாட்டத்திற்கு காவல் துறை தடை விதித்துள்ளது. இரு தினங்களுக்கு முன் அங்குள்ள ஒரு திரையரங்கில் 150 அடி உயர பேனர் சரிந்து விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, படம் வெளியாகும் இரண்டு திரையரங்குகளில் ரசிகர்கள் கட் அவுட், பேனர் வைக்கவும், DJ இசை கொண்டாட்டங்களுக்கும் நெல்லை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்