தன் பிள்ளைகள் எடுக்கும் படங்களின் கதைகளில் தான் தலையிடுவதில்லை என இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன் பேசியுள்ளார். சென்னை, வடபழனியில் குற்றம் தவிர் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய, இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன், தன் பிள்ளைகள் எடுக்கும் படங்களின் கதைகளில் தான் தலையிடுவதில்லை என்று தெரிவித்தார். மேலும், மேடையில் பாடல் ஒன்றை பாடி, இசை நிகழ்ச்சிகளில் தனக்கும் வாய்ப்பு கொடுக்கும்படி ஸ்ரீகாந்த் தேவாவிடம் கேட்டுக் கொண்டார்.