"நரி வேட்டை" - திரைப்படத்தை கண்டு ரசித்து பாராட்டிய பிரபலங்கள்

Update: 2025-05-23 07:58 GMT

நரி வேட்டை திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை இயக்குனர் அமீர்,கே.எஸ்.ரவிக்குமார்,நடிகைகள் மீனா, அம்பிகா, குட்டி பத்மினி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் திரையரங்கில் கண்டு ரசித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை மீனா, படம் மிகவும் சுவாரசியமாக இருந்ததாகவும், கதை விறுவிறுப்பாக இருந்தது என்றும் பாராட்டினார். அதேபோன்று இயக்குநர் அமீர் பேசுகையில், பழங்குடியின மக்களுக்கு எதிராக அதிகாரமும் அரசியலும் எப்படி செயல்படுகிறது என்பதை இப்படம் தோல் உரித்து காட்டுவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய நடிகர் சேரன் ஒரு அதிகாரம் நம்மளை எப்படி சின்னாபின்னமாக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தனி மனிதன் ஒருவன் போராடினால் அவனுக்கு வெற்றி கிடைக்கும் என்பதை இப்படம் உணர்த்துவதாக கூறினார். மேலும் இப்படம் பழங்குடியினரின் பிரச்சனைகளை தீர்க்கமாக எடுத்துரைப்பதாக இயக்குனர் சீனு ராமசாமியும், படம் தனது மனதை கனமாக்கி விட்டதாக கே.எஸ்.ரவிக்குமாரும் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்