நடிகர் சோனு சூட், கிரிக்கெட் வீரர் யுவராஜ்-க்கு ED சம்மன்

Update: 2025-09-16 12:39 GMT

நடிகர் சோனு சூட், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் உள்ள அலுவலகத்தில் வருகிற 23ஆம் தேதி ஆஜராகும்படி யுவராஜ் சிங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் வருகிற 24ஆம் தேதி சோனு சூட் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்புடைய பண மோசடி வழக்கில், இருவரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது. சமீபத்தில், இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, முன்னாள் எம்பி மிமி சக்ரவர்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது, குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்