நடிகை காஜல் அகர்வாலுக்கு என்ன ஆச்சு? தீயாய் பரவிய தகவல் - வெளியான அதிகாரபூர்வ அறிக்கை
பிரபல நடிகை காஜல் அகர்வால் வாகன விபத்தில் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தான் நலமாக இருப்பதாகவும், வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் வாகன விபத்தில் இறந்து விட்டதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இறைவனின் அருளால் தான் ஆரோக்கியத்துடனும், பாதுகாப்பாகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொய்யான செய்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டு உள்ளார்.