Kuberaa | Dhanush | தனுஷின் ‘குபேரா’ படம் எத்தனை கோடி வசூல் தெரியுமா? - வெளியான தகவல்
தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘குபேரா’ திரைப்படம் வெளியான ஐந்தே நாளில் வசூல் சாதனை படைத்துள்ளது. சேகர் கம்முலா இயக்கத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘குபேரா’. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பான் இந்தியா படமாக கடந்த 20 ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்நிலையில், படம் வெளியான 5 நாட்களில் 100 கோடி வசூலை எட்டி 'குபேரா' சாதனை படைத்துள்ளது.