"தமிழ் சினிமாவுக்கு பேராபத்து.." - இயக்குநர் பேரரசு உருக்கம் | Director Perarasu | Tamil Cinema
சிவாஜி இல்லம் ஜப்திக்கு வந்திருப்பது தமிழ் சினிமா ஆபத்தில் இருப்பதை உணர்த்துவதாக இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் லீச் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திரைப்பட தயாரிப்பாளர் ராஜன், இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய திரைப்பட இயக்குநர் பேரரசு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இல்லம் ஜப்திக்கு வந்திருப்பது தமிழ் சினிமா ஆபத்தில் இருப்பதை உணர்த்துவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் ராஜன், இந்த விவகாரத்தில் திரைத்துறையினர் ஒன்று சேர்ந்து சிவாஜி கணேசனின் இல்லத்தை மீட்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.