செல்வராகவனை உதவி இயக்குனராக சேர்க்க பலரிடம் முயற்சி செய்ததாகவும், ஆனால் தனது மகன் என கூறி அவரை யாரும் சேர்க்கவில்லை என்றும் இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். வெட்டு படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், வாரிசுகள் கட்டாயமாக சினிமாவிற்கு வர வேண்டுமென்ற அவசியம் இல்லை, ஆனால் தலையெழுத்து இருந்தால் வந்து தான் ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.