இசையமைப்பாளர் இமானின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டு தன்னுடைய மெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டுகள் மாற்றப்பட்டுள்ளதாக இமான் தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது எக்ஸ் தளத்திலிருந்து வரும் தவறான மற்றும் அங்கீகரிக்கப்படாத பதிவுகளை பொருட்படுத்த வேண்டாம் என்றும், இமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தனது கணக்கை மீட்டு தருமாறு எக்ஸ் நிறுவனத்திடம் அவர் கேட்டு கொண்டுள்ளார்.