D.Imman Concert | சென்னையில் நடைபெற இருந்த D.இமான் இசைநிகழ்ச்சி ஒத்திவைப்பு - வெளியான காரணம்
இசையமைப்பாளர் இமான் கான்சர்ட்–ஒத்திவைப்பு
சென்னையில் நடைபெறவிருந்த இசையமைப்பாளர் D.இமான் லைவு இன் கான்சர்ட் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் ஜூன் 14ஆம் தேதி நடைபெற இருந்த D. இமான் லைவு இன் கான்சர்ட் நிகழ்ச்சி, எதிர்பாராத காலநிலை காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் டிக்கெட் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 12 முதல் 7 நாட்களுக்குள் முழு பணத்தைத் திரும்ப பெறலாம் எனவும் விரைவில் நிகழ்ச்சிக்கான
புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.