நடிகை மீனாட்சி சௌத்ரியை ஆந்திரப் பிரதேச அரசு பிராண்ட் அம்பாசிடராக நியமித்ததாக வெளியான செய்திகளை ஆந்திர அரசு மறுத்துள்ளது. இது குறித்து அம்மாநிலத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு வெளியிட்டுள்ள தகவலில்
அரசின் பெயரில் வேண்டுமென்றே இதுபோன்ற பொய்யான பதிவுகளை வெளியிடுவோர் மீதும், பொய்யான பிரசாரம் செய்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.