ரூ.100 மட்டுமே செலுத்தி படம் பார்த்த மொத்த கிராமம்

Update: 2025-08-02 08:36 GMT

'சீதாரே ஜமீன் பர்'- ரூ.100 மட்டுமே செலுத்தி படம் பார்த்த கிராமம்

தான் நடித்த "சீதாரே ஜமீன் பர்' படத்தை முழு கிராமமும் வெறும் 100 ரூபாய் மட்டுமே செலுத்தி பார்த்துள்ளதாக குஜராத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சொந்தமாக யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி இனி தனது படங்களை வெளியிடவுள்ளதாகவும், மக்கள் குறைந்த கட்டணம் செலுத்தி அவற்றை பார்க்கலாம் என்றும் ஆமீர் கான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் தனது படத்தை கொண்டு சேர்க்கும் விதமாக குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள கோட்டாய் கிராமத்தில் முதல் முதலாக திரையிடப்பட்ட சீதாரே ஜமீன் பர் படத்தை கிராம மக்களுடன் சேர்ந்து பார்த்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதன் மூலம் தான் நடித்த 'லகான்' படத்தைப் பற்றிய நினைவுகள் மலர்ந்ததாகவும், கிராமப்புறங்களில் குறைவான திரையரங்குகள் இருப்பதால், சினிமா இப்பகுதிகளை சென்றடைய வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்