கும்பமேளாவில் புனித நீராடிய பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் | Akshay Kumar
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கலந்துகொண்டார். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அக்ஷய் குமார், கும்பமேளாவுக்கு உத்தரப்பிரதேச அரசு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும், இதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.