Akshay Kumar | வீடியோ கேம் விளையாடிய மகளுக்கு நேர்ந்த சம்பவம் | அக்ஷய் குமார் சொன்ன ஷாக் நியூஸ்
வீட்டில் ஆன்லைன் வழியே வீடியோ கேம் விளையாடிய தனது மகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி வந்ததாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற சைபர் விழிப்புணர்வு மாத தொடக்க விழாவில் நடிகர் அக்ஷய் குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் வீட்டில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகவும, அப்போது நீங்கள் ஆணா, பெண்ணா என்று குறுஞ்செய்தி வந்ததால், அதற்கு தன் மகள் பெண் என பதலளித்ததாகவும் கூறினார். உடனே நிர்வாண படங்களை அனுப்ப முடியுமா? என்று மீண்டும் குறுஞ்செய்தி வந்ததாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த மகள் நடந்தவற்றை தனது மனைவியிடம் கூறியதாகவும் தெரிவித்தார். எனவே மகாராஷ்டிரா மாநில பள்ளிகளில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.