Ak Racing | Malaysia | ஏகே ரேசிங் அணியின் அடுத்த சம்பவம் - வெயிட்டிங்கில் ரசிகர்கள்

Update: 2025-12-02 02:55 GMT

மலேசியாவின் செபாங் சர்வதேச சர்க்யூட்டில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் தனி அணியினருடன் பங்கேற்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித் குமார், கார் ரேசிங் மீது கொண்ட தீராத காதலால், 'அஜித் குமார் ரேசிங் அணி'-ஐ உருவாக்கினார்.

அதன் பிறகு, அவரது அணி துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற சர்வதேச பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. மேலும், 2025 க்ரெவென்டிக் 24 மணி நேர ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்து உலக அளவில் கவனம் ஈர்த்தது.

தற்போது, மாலேசியாவில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் பந்தயத்தில் ஏகேவின் அணி பங்குபெறுவதால், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்