Ajith Kumar Car Racing | Spain | அடுத்த அதிரடிக்கு தயாரான அஜித் - வெயிட்டிங்கில் ரசிகர்கள்
நடிகர் அஜித் குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள, பல்வேறு கார் ரேஸில் கலந்து கொள்ள உள்ளார். நடிகர் அஜித் குமார் ஐரோப்பியாவில் நடைபெற்று வரும் பல்வேறு சர்வதேச கார் ரேஸில் பங்கேற்று, வெற்றி வாகையை சூடி வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்த கட்டமாக செப்டம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 12-ம் தேதி வரை, ஸ்பெயினில் நடைபெற உள்ள பல்வேறு கார் ரேஸில் கலந்து கொள்ள உள்ளார். இதன் பிறகு அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.