கோவை காந்திபுரத்தில் உள்ள திரையரங்கில் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான நிலையில், திரையரங்கிற்குள் ரசிகர்கள் மத்தாப்பூ மற்றும் வண்ண புகை பட்டாசு வெடித்து கொண்டாடினார்.. இதே போல திரையரங்கிற்கு வெளியே நடைபெற்ற கொண்டாடத்தின் போது இளைஞர் ஒருவர் சரவடியை கையில் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.