திரையுலகைச் சேர்ந்த பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும் என நடிகை மிருணாளினி கூறியுள்ளார். குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் நடிகை மிருணாளினி கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மிருணாளினி, எந்த துறையிலும் பெண்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும், அவற்றைத் தவிர்க்க தங்களைத் தாங்களே பெண்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.... இதுவே தனது அனுபவம் என்று கூறியுள்ளார்.