தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தின் பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிக்கப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ளதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்ட வீடியோவில், அதன் தலைவர் நாசர் குரலில் ஒவ்வொரு தளத்திற்கான கட்டுமான நிலவரம் எப்படி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க கட்டடத்தின் ஆடிட்டோரியம், கன்வென்ஷன் ஹால், மினி கன்வென்ஷன் ஹால், டைனிங் ஹால், சங்க அலுவலகம், உள்ளிட்டவை குறித்து அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.