நடிகர் பாலா மீது, அவரது முன்னாள் மனைவி அம்ரிதா அளித்த புகாரின் பேரில், கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து மனுவில் தனது கையெழுத்தை பாலா போலியாக போட்டதாகவும், ஒப்பந்தத்தில் ஒரு பக்கம் போலியாக உருவாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது மகளின் காப்பீட்டு தொகை மற்றும் வங்கியில் இருந்த 15 லட்ச ரூபாய் பணத்தை பாலா மோசடி செய்ததாகவும் அம்ரிதா புகார் அளித்துள்ளார்.