Actor Soori Issue | காட்டுத்தீயாய் பரவி அரசியல் அரங்கை பரபரப்பாக்கிய தகவல் நிஜமா?
வதந்தி பரப்பாதீங்க என நடிகர் சூரி கருத்து
தன் பெயரில் வலம் வரும் அரசியல் கருத்து போலியானது என்றும், வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தவறான தகவல் சமூகத்துக்கு தீங்கையே தரும் என குறிப்பிட்டுள்ள அவர், செயலில் நிதானமும், முதிர்ச்சியும் காட்டுவோம் என குறிப்பிட்டு, நன்மையையும், அன்பையும் பரப்புவதில் சிரத்தை காட்டுங்கள் என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். வதந்திகளை பரப்புவதில் கவனம் செலுத்தாமல், செய்ய வேண்டிய வேலையில் கவனம் செலுத்துங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.