ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய நடிகர் சோனு சூட் - காவல்துறை விசாரணை
பாலிவுட் நடிகர் சோனு சூட், மேலாடையும், ஹெல்மெட்டும் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
2023ஆம் ஆண்டு ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்பிட்டி காவல்துறை தெரிவித்துள்ளது. வீடியோவின் நம்பகத்தன்மையை விசாரிக்கும் பணி கைலாங்கில் உள்ள டிஎஸ்பி தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த சோனு சூட், அது ஒரு பழைய ஸ்கிரிப்ட்டின் ஒரு பகுதி எனவும், பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வாகனம் ஓட்டுங்கள், எப்போதும் ஹெல்மெட் அணியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.