தனது அடுத்த படம் எப்படி இருக்கும்? என்ற தகவலை பகிர்ந்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் கலக்குகிறார் சிவகார்த்திகேயன்.
சமீபத்தில் மாவீரன், அமரன், பராசக்தி என தொடர்ச்சியாக ஆக்ஷன் படங்களில் அவர் நடித்தது ரசிகர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றது. வசூலிலும் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார்.
மாவீரனில் கோழை எப்படி வீரானாவான் என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் கச்சிதமாக பொருந்தியிருந்தார்...
பின்னர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து தயாரான அமரன் படத்தில், சிவகார்த்திகேயனின் நடிப்பு பட்டித்தொட்டி எங்கும் பேசப்பட்டது...
இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் பொங்கல் வெளீயிடாக ரிலீஸான பராசக்தி திரைப்படமும் தியேட்டரில் வசூலை வாரி குவிக்கிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக ஆக்ஷன் சீக்வன்சில் Action sequence நடித்துவரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படத்தில் நடிக்க போவதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் முற்றிலும் எண்டர்டெயின்மென்ட் கலந்த படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
