நடிகர் ராமராஜன், இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை கோடம்பாக்கத்தில் இளையராஜாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமராஜன், பிறந்தநாளில் இளையாராஜாவை சந்தித்து ஆசி பெற்றது பெரிய பாக்கியம் என்றார். உலக நாடுகளிலும் இளையராஜாவின் பாடல்கள் ஒலிப்பதாக தெரிவித்த ராமராஜன், கரகாட்டகாரன் படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறினார்.