நடிகர் அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை 100 கோடிக்கு வாங்க பல முன்னணி ஓடிடி தளங்கள் தயாராக இருந்தும், படம் வெளியான 8 வாரங்களுக்கு பிறகு தனது YouTube சேனலில் படத்தை வெளியிட அமீர் கான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமீர் கானின் இந்த தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இயக்குநர் ஆர். எஸ். பிரசன்னா இயக்கிய இந்த படத்தில், கூடைப்பந்து பயிற்சியாளராக அமீர் கான் வரும் நிலையில், ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.