ஒரே நாளில் திரைக்கு வந்த 7 படங்கள்.. தள்ளிப்போகும் "படைத்தலைவன்" - பரபரப்பில் திரையுலகம்
கோலிவுட்டில இன்று ஒரே நாள்ல 7 படங்கள் வெளியாகி இருக்கு... வெளியான படங்கள் என்னென்... நடிகர்கள் யார் யார்ன்னு பாக்கலாம்....
விஜய் சேதுபதியோட ஏஸ், டொவினோ தாமஸ் நடிச்ச நரிவேட்டை, யோகி பாபுவோட ஸ்கூல், சேதுவோட மையல், ஆதம் ஹசனோட அகமொழி விழிகள், ஆகக் கடவன , திருப்பூர் குருவினு 7 படங்கள் வெளியாகியிருக்கு........
ஆறுமுக குமார் இயக்கத்துல விஜய் சேதுபதி, யோகி பாபு, பப்லு, பிரபல கன்னட நடிகை ருக்மிணி நடிப்புல உருவாகியிருக்க திரைப்படம் தான் ஏஸ்... ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க சாம் சி.எஸ் பின்னணி இசை அமைச்சிருக்காரு....முழுக்க முழுக்க மலேசியால தயாரான இந்த படம் விஜய் சேதுபதியோட ஐம்பதாவது படமான மகாராஜா மாபெரும் வெற்றியடஞ்சதுக்கு அப்றோம் திரைக்கு வந்திருக்கிறதால ரசிகர்கள் கிட்ட எதிர்பார்ப்பு அதிகரிச்சிருக்கு....
அனுராஜ் மனோகர் இயக்கத்துல டொவினோ தாமஸ் நடிச்ச, உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியிருக்குற படம் தான் நரி வேட்டை.... இதுல சுராஜ் வெஞ்சார மூடு, சேரன் முக்கிய கதாபாத்திரத்துல நடிச்சிருக்காங்க... நடிகரும், இயக்குனருமான சேரன் மலையாள சினிமால நடிகராக அறிமுகமாகியிருக்க முதல் படம் இது...
Quantum Film Factory நிறுவனம் சார்பா ஆர்.கே.வித்யாதரன் தயாரிச்சு, இயக்கியிருக்க படம் தான் "ஸ்கூல்... இதுல பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார் முக்கிய கதாபாதிரத்துல நடிச்சிருக்காங்க..முழுக்க முழுக்க ஸ்கூல் பின்னணியில உருவாகியிருக்குற இந்த படத்துக்கு இளையராஜா இசையமைச்சிருக்காரு....
‘மைனா’ படத்துல போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிச்ச சேது, ஹீரோவாக நடிச்சிருக்குற படம் ‘மையல்... சம்ரிதி தாரா நாயகியாக நடிச்சிருக்காங்க... படம் கல்வராயன் மலை பகுதியில நடந்த நிகழ்வுகள மையமா கொண்டு எடுக்கப்பட்டிருக்கு.....
பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்புல, ஆதம் ஹசன்,நேஹா ரத்னாகரன் நடிச்சிருக்குற அகமொழி விழிகள், வார்த்தைகளோட வலிமையை உணர்த்தர ஆகக் கடவன , பெண்கள் சந்திக்குற அத்துமீறல்கள சொல்ற திருப்பூர் குருவி உள்ளிட்ட படங்களும் வெளியாகியிருக்கு....
வெளியாகி இருக்குற இந்த படங்கள்ல ரசிகர்களோட ஆதரவ பெற்ற படங்கள் என்னன்றது வரும் நாட்கள்ல தான் தெரியும்...
இதுக்கு இடையில, அன்பு இயக்கத்துல விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிச்சு திரைக்கு வர இருந்த படை தலைவன் படம், தியேட்டர் ஒதுக்கீடு காரணமாக தற்காலிகமாக தள்ளிப் போறதா படக்குழு அறிவிச்சிருக்கு....