மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.08.2025) | 1 PM Headlines | ThanthiTV
- பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணி...
- டெல்லியில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து பேரணி சென்றபோது, தடுத்து நிறுத்தியதால் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்ணா...ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை கைது செய்த டெல்லி போலீசார்...
- தேர்தல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளி...நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு...
- டெல்லியில் பேரணியாக சென்ற போது போலீசாருடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தள்ளுமுள்ளு...திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் மயங்கியதால் பரபரப்பு...
- தேர்தல் ஆணையத்தை பாஜக தனது மோசடி இயந்திரமாக பயன்படுத்துகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு...
- ஒன்பதாம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுத சி.பி.எஸ்.இ. ஒப்புதல்...அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு...
- பொறியியல் கலந்தாய்வில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் தற்போது வரை நிரம்பி உள்ளன...
- சென்னையில் ஏசி மின்சார பேருந்துகள் சேவை தொடக்கம்...பெரும்பாக்கம் பேருந்து பணிமனையில் இருந்து தொடங்கி வைத்தார், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
- எடப்பாடி பழனிசாமிக்கு 2026ஆம் ஆண்டின் தேர்தல் தோல்வி மேற்கு மண்டலத்தில் தொடங்கும்...உடுமலையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...
- திருப்பூர் மாவட்டத்திற்கு ஆயிரத்து 427 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்...முடிவுற்ற திட்டப் பணிகளும் தொடங்கி வைப்பு...
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்தது...ஒரு சவரன் தங்கம் 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை...
- பீகார் மாநில துணை முதலமைச்சர் விஜய்குமார் சின்ஹாவுக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ்...2 வாக்காளர் அட்டைகள் வைத்திருந்த விவகாரத்தில் வரும் 14ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு...
- தேர்தல் ஆணையத்தை பாஜக தனது மோசடி இயந்திரமாக பயன்படுத்துகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு...
- டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...