மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04.08.2025) | 1 PM Headlines | ThanthiTV
- நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்பி சுதா குற்றச்சாட்டு...
- மதுரையில் வரும் 25ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தவெக 2வது மாநில மாநாடு...விநாயகர் சதுர்த்தி நெருங்குவதால், 21ம் தேதியே மாநாட்டை நடத்த காவல்துறை அறிவுறுத்தல்...
- முதல்வர் இல்லத்திற்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை...இந்தச் சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை எனவும் விளக்கம்...
- ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெற விதித்த தடையை நீக்க கோரிய வழக்கு...திமுகவின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...
- வங்காள மொழியை "வங்கதேச மொழி" என்று டெல்லி காவல்துறை வர்ணித்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்...
- தமிழக வாக்காளர் பட்டியலில் பீகாரை சேர்ந்த ஆறரை லட்சம் பேர் சேர்க்கப்படுவதாக காங்கிரஸ் கூறிய புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு...
- வெளிமாநிலத்தவர்கள் 6.5 லட்சம் பேரை தமிழக வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து...
- பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளி...
- தூத்துக்குடியில் முதல்முறையாக நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு...
- தமிழகம்தான் மின்சார வாகனங்களின் தலைநகரம் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...
- தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தை திறந்து வைத்து, கார் விற்பனையை தொடங்கிவைத்த முதலமைச்சர் ஸ்டாலின்...முதற்கட்டமாக ஆண்டுக்கு 50,000 மின்சார வாகனங்களை தயாரிக்க இலக்கு...