வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பியோடிய 6 இளம் சிறார்கள்.. சென்னையில் சிக்கிய ஒருவர் - போலீசார் அதிரடி

Update: 2023-04-01 06:18 GMT
  • வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார்கள் தப்பியோடிய விவகாரத்தில், சென்னையில் ஒரு இளம் சிறார் கைது செய்யப்பட்டார்.
  • வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 18 வயது முதல் 21 வயது உடைய 42 இளைஞர்கள் மற்றும் இளம் சிறார்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
  • அவர்களில் 6 இளம் சிறார்கள் மார்ச் 27ம் தேதி அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து சுவர் ஏறி தப்பி சென்றனர்.
  • தப்பி ஓடிய இளம் சிறார்களை பிடிப்பதற்காக வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் தலைமையில் 3 அடிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
  • தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் தப்பி ஓடிய இளம் சிறார்களை தேடி வரும் நிலையில், ஒரு இளம் சிறாரை சென்னையில் வைத்து தனிப்படை போலீசார் வெள்ளியன்று, கைது செய்துள்ளனர்.
  • போலீசில் சிக்கிய அந்த இளம் சிறாரை வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்திற்கு தனிப்படை போலீசார் அழைத்து வருகின்றனர்.
  • மேலும் மீதமுள்ள 5 இளம் சிறார்களும் விரைவில் பிடிபடுவார்கள் என மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்