திருவாரூர் மாவட்டம் வரம்பியத்தில் பாலம் கட்டுமானப்பணி முடிந்தும், சாலை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வரம்பியத்தில் இருந்து விட்டுக்கட்டி செல்லும் சாலையில் உள்ள முள்ளியாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. கட்டுமானப்பணி முடிந்தும் அருகிலுள்ள சாலை சீரமக்கப்படவில்லை. மேலும் சாலையில் கொட்டப்பட்ட மண், தொடர் மழையால் சேரும், சகதியுமாக மாறியது. இதனால் பள்ளி மாணவர்கள் சேற்றில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.