திமுக எம்பி தங்கதமிழ்செல்வன் மகன் மீது கைவைத்த இருவர்

Update: 2025-07-02 03:34 GMT

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் திமுக எம்பி தங்கதமிழ்செல்வனின் மகன் மீது தாக்குதல் நடத்தியதாக தந்தை, மகன் இருவர் கைது செய்யப்பட்டனர். வண்டியூர் மாரியம்மன் கோவிலில், தரமற்ற தேங்காய் பழத்தட்டை மாற்றி தருமாறு கேட்டபோது, தங்கதமிழ்செல்வனின் மகன் நிஷாந்துக்கும், கடை வியாபாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . அப்போது நிஷாந்தின் மீது தேங்காய்களை வீசி வியாபாரிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதனால், நிஷாந்த் தலையில் காயம் அடைந்த நிலையில், வியாபாரி சமயமுத்து அவரது மகன் மணிகண்ட பிரபுவை தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்